தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி மூலம் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். சிவகார்த்திகேயனுக்கு விஜய் டிவி தான் தாய் வீடு. 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மெரினா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார். அதற்குப் பின்னர் தான் சினிமாவில் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், இவர் தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். பின் படி படியாக உழைத்து முன்னேறி இந்த அளவிற்கு சினிமா உலகில் உயர்ந்து உள்ளார்.

கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. பின் ஹீரோ என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து உமா ரியாஸ்கான் அவர்கள் சமீபத்தில் பேட்டியில் பேசியுள்ளார். இவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உமா ரியாஸ்கான் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து உள்ளார். சமீபத்தில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சி என்றால் மற்ற நிகழ்ச்சிகளை போல அனைவரும் சமையல் தெரிந்து வந்து செய்வது கிடையாது. சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் இணைந்து செய்யும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி அளித்து இருந்தார்.
அதில் அவர் கூறியது, சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு சினிமா உலகில் மிகப் பெரிய ஸ்டாராக இருப்பார் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அவர் அப்போதே நிறைய திறமை கொண்டவர். ஸ்டாண்ட் அப் காமெடி மட்டுமில்லாமல் மிமிக்ரி என பலவகை செய்வார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக பங்கு பெற்ற போது அவரிடம் நான் நீங்கள் இதுமட்டுமில்லாமல் வேற ஏதாவது நிறைய நிகழ்ச்சிக்கு செல்லுங்கள் என்று சொன்னேன். அதற்கு பிறகு அவரும் நிறைய திறமைகளை வளர்த்துக் கொண்டார். அதனால் தான் அவர் இந்த அளவிற்கு வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார் என்று சொல்லலாம்.
வீடியோவில் 18:15 நிமிடத்தில் பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=riYzLPu2c-4&feature=youtu.be
விஜய் டிவி மட்டும் இல்லாமல் வெளியே பல நிகழ்ச்சிகளை பண்ணுங்கள் என்று சொன்னேன். அப்போது அவர் படித்துக் கொண்டிருந்தார். பின் நான் முதன் முதலாக அவரிடம் பணம் கொடுத்து வெளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலந்துக்க சொன்னேன். அந்த நிகழ்ச்சிக்கு நான் பணம் கொடுக்கும்போது சிவாவிடம் இது 25 கோடியாக மாறவேண்டும் என்று சொன்னேன். நான் சிவா மீது வைத்த நம்பிக்கையும், அவரிடம் இருந்த திறமையும் தான் அவரை இந்த அளவுக்கு மிகப் பெரிய நடிகராகி இருக்கிறது என்று பெருமையுடன் கூறினார்.





