உங்களுக்கு கடைசி வரைக்கும் அதை கூட வாங்கி கொடுக்க முடியவில்லையே. தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு டிடி உருக்கம்.

0
2685
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகி வருகிறார்.

-விளம்பரம்-

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.டிடியின் சகோதரி ப்ரியாதர்ஷினயை அனைவருக்கும் தெரியும் மேலும், இவருக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். அவர் துபாயில் விமான ஓட்டுநராக இருந்து வருகிறார். அதனால் தான் டிடி அடிக்கடி துபாய்க்கு பறந்து விடுவார்.

- Advertisement -

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். ஆனால், இந்த லாக்டவுன் நேரத்தில் கடந்த சில காலமாகவே டிடி தனது கைப்பட சில வாழ்கை தத்துவங்களை எழுதி அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சம்பீத்தில் டிடி தனது தந்தை குறித்து எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்ட டிடி, என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனது தந்தைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய கடிதம் எழுதி அதனை என் தந்தையின் நினைவு நாளில் பதிவிட்டிருக்கிறேன். விரைவில் தந்தையர் தினம் வரப் போவதால் அனைத்து தந்தைகளுக்கும் இதனை சமர்ப்பிக்கிறேன். நீங்கள் மகனாக இருந்தாலும் மகளாக இருந்தாலும் தந்தை தான் முதல் ஹீரோ. ஏனென்றால் தந்தையின் நம்பிக்கையை விட வேறு எதுவும் பலமானது கிடையாது. அனைவருக்கும் தந்தையர் தின அட்வான்ஸ் வாழ்த்துக்கள். எனது அப்பாவிற்கு ஒரு சட்டையை வாங்குவேன் என்று நினைக்கிறேன் என்று ஒருமுடன் பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-
Advertisement