டிடி வீட்டில் இரண்டு பைலேட்டா, முதன் முறையாக பைலேட் உடையில் இருக்கும் தம்பியின் புகைப்படத்தை பதிவிட்ட டிடி

0
3234
d
- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் டிடி தான் பல ஆண்டுகளாக விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார். சொல்லப்போனால் விஜய் தொலைக்காட்சியில் டிடி தான் சீனியர் தொகுப்பாளினி என்றும் சொல்லாம். டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் தந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B_cHHHXDNGd/

நடிகை டிடி வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளையும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார். திவ்யதர்ஷினி குறும்புத்தனமும், சுட்டித்தனமும் கொண்டவர். இவருடைய நகைச்சுவையான, துள்ளலான பேச்சு அனைவருக்கும் தெரிந்தது தான். அதுமட்டும் இல்லாமல் திவ்யதர்ஷினியின் பேச்சால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.

- Advertisement -

இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமானார். மேலும், இவருடைய சகோதரி பிரியதர்ஷினி ஆவார். இவரும் ஒரு சிறந்த தொகுப்பாளினியும் ஆவர். மேலும், இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பிரியதர்ஷினி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதே போல இவர்கள் இருவருக்கும் சுதர்ஷன் என்ற சகோதரரும் இருக்கிறார்.

https://www.instagram.com/p/B6pMOD5DbaE/

டிடியின் இளைய சகோதரரான இவர் விமான ஓட்டுநராக வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரி மற்றும் தனது தமபி சுதர்ஷனுடன் ஐரோப் சென்று இருந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தன . ஆனால், உண்மையில் டிடியின் சகோதரர் விமான ஓட்டுநர் தானா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

-விளம்பரம்-

அதனை தெளிவுபடுத்தும் விதமாக இன்று உலக பைலட் தினத்தை முன்னிட்டு டிடி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரர் விமான ஓட்டுனர் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எங்கள் வீட்டில் இரண்டு பைலட் இருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement