இப்படி கூப்டுட்டு, எப்படி திருமணம் செஞ்சுக்க சொல்றீங்க. தலையில் அடித்துக்கொண்டு டிடி. வீடியோ இதோ.

0
1593
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

-விளம்பரம்-

திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார். டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

- Advertisement -

இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், தற்போதும் டிடி வெற்றிகரமான தொகுப்பாளியனாக இருந்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கு டிடி அடிக்கடி தனது ரசிகர்களுடன் லைவ் சாட்டில் வந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம்.

அப்படி சமீபத்தில் டிடியுடன் ரசிகர்கள் சிலர் லைவ் சாட்டில் கேள்விகளை கேட்டனர். அப்போது ரசிகர் ஒருவர், அக்கா உங்கள ரொம்ப புடிக்கும், என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்டிருந்தார். அதற்கு தலையில் அடித்துக்கொண்ட டிடி, எப்படி அக்கானு சொல்லிட்டு திருமணம் செஞ்சுக்கிறயான்னு கேக்குறீங்க. எல்லாம் நேரமும் எனக்கு ஏன் இது மாதிரி கேள்விகளை கேட்கிறீர்கள் என்று கூறியுள்ளார் டிடி.

-விளம்பரம்-
Advertisement