ஹாலிவுட் லெவலுக்கு சென்ற டிடி. அடிச்சது பாரு இப்படி ஒரு லுக்கு.

0
17446
dd
- Advertisement -

டி.டி.ன்னு சொன்னா தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் 20 வருடங்கள் கடந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். எத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளையும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார். தற்போது அங்கேயே எம்ஃபில் படிப்பையும் முடித்து விட்டு பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும், திவ்யதர்ஷினி குறும்புத்தனமும், சுட்டித்தனமும் கொண்டவர். இவருடைய நகைச்சுவையான, துள்ளலான பேச்சு அனைவருக்கும் தெரிந்தது தான்.

-விளம்பரம்-
Image

அதுமட்டும் இல்லாமல் திவ்யதர்ஷினியின் பேச்சால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் டி 20, ஜோடி சீசன் 7 மற்றும் காபி வித் டிடி என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவி தொகுப்பாளர் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது டிடி மட்டும் தான். அந்த அளவிற்கு டிடி தொகுப்பாளர் பணியில் திறம்பட செயல்பட்டார். மேலும், இவருடைய சகோதரி பிரியதர்ஷினி ஆவார். இவரும் ஒரு சிறந்த தொகுப்பாளினியும் ஆவர். இவருடைய தம்பி விமான ஓட்டியாக உள்ளார்.

இதையும் பாருங்க : படிக்காதவன் படத்தில் விவேக் கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது வடிவேலு தான். புகைப்படம் இதோ.

- Advertisement -

நடிகை டிடி 2014 ஆம் ஆண்டு தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றார்கள். இதை தொடர்ந்து டிடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், படங்களில் நடித்தும் வருகிறார். இவர் விசில்,நள தமயந்தி,தனுஷின் ப.பாண்டி, சர்வம் தாளமயம்,துருவ நட்சத்திரம் என பல படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ள படங்கள் அனிமேஷன் படம் தான். அந்த வகையில் தான் தற்போது ஒன்று படம் வெளியானது.

Image
Image

இது அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே ஃப்ரோஸன் படம் திரைக்கு வந்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. பின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பட்டைய கிளப்பியது என்றும் சொல்லலாம். தற்போது ஃப்ரோஸன் படத்தின் இரண்டாம் பாகம் 2 டிசம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது என்ற தகவல் வந்துள்ளது. தமிழில் வெளியாகும் இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் முன்னணி கதாபாத்திரமான எல்சா கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்து உள்ளார். இவரைத் தொடர்ந்து தற்போது பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு தமிழ் வசனங்கள் எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும்,ஓலஃப் கதாபாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன் பின்னணி குரல் கொடுத்து உள்ளார். அதேபோல் எல்சாவின் தங்கை ஆன்னாவிற்கு பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அவர்கள் குரல் தந்திருக்கிறார். மேலும்,உலகம் முழுவதும் ரசிகர்கள் பயங்கர எதிர்பார்ப்பில் உள்ள ஃப்ரோஸன் படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாக உள்ளது. மேலும், இந்த படம் குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது.

Advertisement