தனது கணவர், மகன் மற்றும் மகளுடன் அறந்தாங்கி நிஷா நடத்திய போட்டோ ஷூட் – புகைப்படம் இதோ.

0
57403
aranthangi-nisha
- Advertisement -

சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

-விளம்பரம்-
View this post on Instagram

cute family and happy family #myworld #enulagam

A post shared by Aranthangi Nisha (@aranthangi_nisha) on

காமெடி செய்வது பெண்களாலும் முடியும் என்று மக்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நிஷா. அப்போது தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது.

View this post on Instagram

kutty chellam safa #daughter #azhagu

A post shared by Aranthangi Nisha (@aranthangi_nisha) on

மேலும் , தனது அம்மாவே தனக்கு மகளாக பிறந்துவிட்டார் என்று உருக்கமுடன் தெரிவித்திருந்தார் நிஷா.இப்படி ஒரு நிலையில் அறந்தாங்கி நிஷா, தனது கணவர், மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவரது மகள் அச்சு அசலாக குட்டி நிஷா போலவே இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement