அக்கா இவ்வளவு நிறம் இல்லையே எங்கேயோ தப்பு நடந்துள்ளது – அறந்தாங்கி நிஷா வெளியிட்ட புகைப்படம்.

0
5466
Nisha
- Advertisement -

விஜய் டீவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. பொதுவாகவே காமெடியன்கள் என்றால் ஆண்கள் மட்டும் தான் என்ற எண்ணத்தை தகர்த்து எறிந்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்து கொண்டு சாதித்து காட்டியவர். தன்னுடைய பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கி உள்ளார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Shoot time

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on

மேலும், அறந்தாங்கி நிஷா அவர்கள் தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் விஜய் தொலைக்காட்சியில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த போதே நிஷாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.

- Advertisement -

இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களிலேயே அறந்தாங்கி நிஷா மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கினர். அது போக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார் அறந்தாங்கி நிஷா. இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தில் மேக்கப் போட்டுகொண்டு படு கலராக இருந்த நிஷாவை பார்த்து ரசிகர்கள் ஷாக்கடைந்தனர். இதனால் நிஷா பதிவிட்ட இந்த புகைப்படத்திற்கு கீழே, யாருங்க நீங்க எங்க கருப்பு நிஷா எங்க போய் அவங்கள வர சொல்லுங்க என்றும் அக்கா இவ்வளவு நிறம் இல்லையே எங்கேயோ தப்பு நடந்துள்ளது என்றெல்லாம் கமன்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement