முதன் முறையாக விஜய் டிவி கோபிநாத் ட்விட்டரில் வெளியிட்ட அவரது மகள் புகைப்படம்

0
1846
- Advertisement -

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்துள்ளனர் உதாரணமாக சிவா கார்த்திகேயன் தொடங்கி தற்போது உள்ள பப்பு வரை அனைவருமே பிறரை கலாய்த்துக்கொண்டு, ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக தனது தூய தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்து வருபவர். மேலும் இவரின் தமிழ் உச்சரிப்பிற்கும், கணீரென்ற குரலுக்கும் பல ரசிகர்கள் உள்ளார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

-விளம்பரம்-

- Advertisement -

2010 துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட கோபிநாத்திற்கு வெண்பா என்ற அழகான பெண் குழந்தையும் பிறநதுள்ளார் . பெரும்பாலும் கோபிநாத் தனது மனைவி மற்றும் குழந்தையை வெளியுலகத்திற்கு காண்பிக்காமல் இருந்தார். இதனால் இவர் பங்குபெறும் விருது வழங்கும் விழாகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ இவரது மனைவி மற்றும் குழந்தையை அவ்வளவாக காண முடிவதும் இல்லை.

சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் போது தனது மனைவி மற்றும் குழந்தைய அழைத்து வந்தார். மேலும் அவரது அழகான குழந்தையயை பார்த்த ஒரு சில பிரபலங்கள் வெண்பாவை கொஞ்சியதோடு அவருடன் செல்பி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் கோபி தனது ட்விட்டர் பக்கத்தில், தானம் தனது மகள் வெண்பாவும் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் ஒன்றாய் பதிவிட்டுள்ளார். அதில் தனது தந்தை போன்றே உடையணிந்துள்ள வெண்பா பார்ப்பதற்கு சிறு பையன் போன்று இருக்கிறார். தற்போது வெண்பாவின் குயூட் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக அதனை கோபிநாத்தின் ரசிகர்கள் பெரிதும் ரசித்து வருகின்றனர்.

Advertisement