கோபிநாத் மகளுக்கு இப்படி ஒரு திறமையா.! அப்பாவுக்குகாக மகள் செய்த செயல்.!

0
1774
- Advertisement -

விஜய் டிவியின் ஆஸ்த்தான தொகுப்பாளராக இருந்து வரும் கோபி, ‘நீயா நானா ‘ என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமடைந்தார். மேலும் இவரின் தமிழ் உச்சரிப்பிற்கும், கணீரென்ற குரலுக்கும் பல ரசிகர்கள் உள்ளார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

-விளம்பரம்-

 

- Advertisement -

விஜய் தொலைகாட்சியின் மூத்த தொகுப்பாளராக கருதப்படும் கோபிநாத் கடந்த 2010 ஆணம் ஆண்டு துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின் இவருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது . பெரும்பாலும் கோபிநாத் தனது மனைவி மற்றும் குழந்தையை வெளியுலகத்திற்கு காண்பிக்காமல் இருந்தார். இதனால் இவர் பங்குபெறும் விருது வழங்கும் விழாகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ இவரது மனைவி மற்றும் குழந்தையை அவ்வளவாக காண முடிவதும் இல்லை.

-விளம்பரம்-

சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் போது தனது மனைவி மற்றும் குழந்தைய அழைத்து வந்தார். மேலும் அவரது அழகான குழந்தையயை பார்த்த ஒரு சில பிரபலங்கள் வெண்பாவை கொஞ்சியதோடு அவருடன் செல்பி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள கோபிக்கு அவரது மகள் கிட்டார் வாசித்த வீடியோ ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தார் கோபி. தற்போது வெண்பாவின் குயூட் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாக அதனை கோபிநாத்தின் ரசிகர்கள் பெரிதும் ரசித்து வருகின்றனர்.

Advertisement