தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறை – Trpயில் சன் டி.வியை பின்னுக்குத் தள்ளிய சேனல்.  

0
2492
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே சன் டிவியை விஜய் டிவி பின்னுக்கு தள்ளியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. சீரியல் மட்டும் இல்லாமல் காமெடி ஷோ, பலவித ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள், வெரைட்டி வெரைட்டியான நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.

- Advertisement -

சின்னத்திரை சீரியல்கள்:

வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைக்களத்துடன் புதுபுது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், சீரியல்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் என தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் சேனல்களாக திகழ்கிறது.

தமிழ் சேனல்கள் குறித்த தகவல்:

எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோடு சன் டிவி மற்றும் விஜய் டிவிகளில் தான் அதிக சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சேனல்களின் இடையில் தான் டிஆர்பி மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. இந்த நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி, சன் டிவியை பின்னுக்கு தள்ளி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது விஜய் டிவிக்கு நம்பர் ஒன் இடம் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து சின்னத்திரை பிரபலங்கள் கூறியது, தமிழ் சேட்டிலைட் சேனலாக தொடங்கிய நாளில் இருந்தே சன் டிவி தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

முன்னிலை வகுத்த விஜய் டிவி:

கேபிள் டிவி மூலம் நகரம் , கிராமம் என்று எல்லா இடங்களிலும் சன் டிவி சேனலை தான் மக்கள் அதிகம் பார்த்து வருகிறார்கள். சன் டிவி சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சித்தி சீரியலை தொடங்கி தற்போது ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் வரை என எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சன் டிவி சீரியல் தொடங்கிய சில வருடங்கள் கழித்து தான் ராஜ், விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் பிற சேனல்களும் தொடர்களை ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவி ஸ்டார் விஜய் ஆக மாறின பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என புதுப்புது வித்தியாசமாக கொடுத்து மக்களை தன் பக்கம் கவர ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜிஆர்பி குறித்த விவரம்:

இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நகரம் தாண்டி கிராமங்களையும் ரீச் செய்திருக்கிறது. அதோடு தற்போது இருக்கும் நிலைமைக்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றால் விஜய் டிவி என்று சொல்கிற அளவுக்கு மாறிவிட்டது. அதோடு ப்ரைம் டைம் தாண்டி பகல் நேரம் ஒளிபரப்பாகும் விஜய் டிவி சீரியல்களுமே தற்போது முன்னிலையில் வகிக்கிறது. மேலும், சீரியல்- சினிமா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு டிஆர்பி என மொத்தமாக சேனல்களை குறிப்பிடும் போது ஜிஆர்பி என்று குறிப்பிடுவார்கள். இந்நிலையில் ஜிஆர்பி அடிப்படையில் இந்த வாரம் வெளியான புள்ளி விவரப்படி சன் டிவியை விட விஜய் டிவி தான் முன்னிலை வருகின்றது. சன் டிவி ஜிஆர்பி 749 பெற்றிருக்கிறது. ஆனால், விஜய் டிவி 772 பெற்று இருக்கிறது. இது விஜய் டிவியின் வரலாற்றிலேயே ஒரு மைல் கல் என்றே சொல்லலாம்.

Advertisement