சீரியலுக்கு போய் இப்போ anchor வாய்ப்பு கூட இல்லாம இருக்க – கேலி செய்தவருக்கு ஜாக்லின் பதிலடி

0
625
- Advertisement -

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், தனித்தன்மையான குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த “கானா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். இவர் விஜய் டிவியில் நடித்து வந்த தேன்மொழி சீரியல் கூட சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

- Advertisement -

யூடியூப் வீடியோ பதிவு :

மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் கிட்டத்தட்ட 2 லட்சம் சப்ஸ்ரைப்பர்களை கொண்ட ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ஃப்ரிஜ் டூர் என்ற வீடியோவை ஒன்றை பதிவேற்றினார். இந்த வீடியோ இதுவரை 2.8 கே பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த விடியோவை கேலி செய்யும் வகையில் ஒருவர் நடிகை ஜாக்லினிற்கு பதிலளித்துள்ளார்.

கேலி செய்த இன்ஸ்டா பயனாளி :

அந்த பின்தொடர்பவர் கூறுகையில் “ஜாக்குலின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து சீரியல்களில் நடிப்பதற்கு மாறி பெரிய தவறு செய்து விட்டதாகவும், தொகுப்பாளனியாகவே இருந்திருந்தால் தொகுப்பாளினி பிரியங்க போன்று வந்திருக்கலாம் ஆனால் சீரியல் சென்றதால் தற்போது வாய்ப்புகள் எந்த கிடைக்காமல் தவிப்பதாகவும் அந்த பின்தொடர்பவர் தெரிவித்துள்ளார். மேலும் மற்றவர்களுக்கு பின்தொடர்பவர்கள் அதிகமாகிக்கொண்டே செல்ல உங்களுக்கு மட்டும் குறைவாகி கொண்டே செல்கிறது கலாய்த்திருந்தார்.

-விளம்பரம்-

பதிலடி கொடுத்த ஜாக்லின் :

இப்படி பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த தொகுப்பாளினி மற்றும் நடிகையான ஜாக்லின் அந்த பதிவில் “எனது சிறந்த அன்பே, நான் முயற்சி செய்யப் போகிறேன் உங்களுடைய இன்ஸ்டா ப்ரொபைல் மற்றும் பயோவில் மட்டுமே அமைதி மற்றும் நல்ல கருத்துக்களை மட்டுமே வைத்திருப்பது எந்த விதத்திலும் உதவாது. அதனை போன்றே இருக்க முயற்சி செய்யுங்கள். எனவே மற்றவர்களை மோசமாக எண்ணி நீங்கள் எனக்கு அறிவுரை சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார் ஜாக்லின்.

Advertisement