யாருமே நீ ? ஜாக்லின் எங்க ? மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்ட ஜாக்லினை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
1741
jacquline
- Advertisement -

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.

- Advertisement -

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.அவரின் நடிப்பும், பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. அதிலும் தற்போது அம்மணி நடித்து வரும் தேன்மொழி தொடர் மூலம் இவருக்கு மேலும் இளசுகளின் ரசிகர் பட்டாளம் கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பொருட்களை விளம்பரபடுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜாக்லினா இது, யாருமா நீ, ஜாக்லின் எங்க ? அவங்க ஐடில நீங்க வீடியோ போட்டு இருக்கீங்க என்று கிண்டலடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement