கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.
இதையும் பாருங்க : தளபதி 65 படத்துக்கு அப்புறம் கே.ஜி.எப் சண்டைக் காட்சிகளை மறந்துவிடுவீங்க – வேற லெவல் சம்பவம். வீடியோ இதோ.
இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.அவரின் நடிப்பும், பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. அதிலும் தற்போது அம்மணி நடித்து வரும் தேன்மொழி தொடர் மூலம் இவருக்கு மேலும் இளசுகளின் ரசிகர் பட்டாளம் கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், திடீரென்று இந்த உலகம் மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் மாறிவிட்டது தினமும் சந்தோஷத்துடனும் ஆச்சரியத்துடனும் தொடர்கிறது. எல்லாம் உன்னால் தான் என்னுடன் இருப்பதற்கு மிக்க நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார் ஜாக்லின். மேலும், இந்த பதிவில் கமன்ட் பகுதியை முடக்கி இருந்தார் ஜாக்லின். இதை பார்த்த பலரும் இது தான் ஜாக்லின் காதலரா என்று முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், ஜாக்லின் பதிவிட்ட அந்த புகைப்படத்தில் இருக்கும் நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்த போது தான் தெரிந்தது அவர் பெண் என்று.