4 வருசமா என்னை படத்தில் பார்க்க முடியாமல் போனதற்கு இதான் காரணம்.! புலம்பும் ஜெகன்.!
தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான 'அனேகன்' படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார் ஜெகன். அதுதான் அவர் நடித்து வெளியான கடைசிப் படம். விஜய் டி.வியின் `கனெக்ஷன்' ஷோவை தொகுத்து வழங்கியவர்.
அந்த ஷோவை முடித்தக் கையோடு, கடந்த சில வருடங்களாக அவர் நடித்த கிட்டத்தட்ட 6 படங்கள் ரிலீஸ் ஆகாமல் விரக்தியில் இருக்கிறார் ஜெகன்.
2005-ம் ஆண்டு வெளியான `கண்ட நாள் முதலாய்' படத்தின் வாயிலாக அறிமுகமானவர் ஜெகன். அதன்பிறகு `அயன்' படத்தில் பரிட்சயமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : அரை குறை ஆடைக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.! இவங்களும் இந்திக்கு போறாங்களோ.!
ஆனால், கடந்த 4 வருடங்களாக இவரை திரைப்படங்களில் காணவே முடியவில்லை. `எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை', `முகம்', `அசுர குரு', `கதை அல்ல நிஜம்', `சகுந்தலாவின் காதலன்', ஜோதிகா, ரேவதி நடித்து வரும் `production no.11' என `6-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். எப்போது இந்தப் படங்கள் ரிலீஸாகும் என்கிற ஆர்வத்தில் இருக்கிறார் ஜெகன்.
இதுகுறித்து பேசியுள்ள ஜெகன், தொடர்ந்து இரண்டு, மூன்று வருடங்களாக நான் நடித்த படங்கள் ரிலீஸாகவில்லை. ஒருவேளை நான் நடித்த 6 படங்கள் ரிலீஸ் ஆனால் இந்த வருஷம் ஹாட்ரிக் ஹிட் எனக்குக் கிடைக்கும். அதனால், `எப்போ சார் அந்த 6 படத்தையும் ரிலீஸ் பண்ணுவீங்க'னு வடிவேல் தொனியில்தான் கேட்கவேண்டியிருக்கு'' என்று கூறியுள்ளார்.