4 வருசமா என்னை படத்தில் பார்க்க முடியாமல் போனதற்கு இதான் காரணம்.! புலம்பும் ஜெகன்.!

0
798
Jagan
- Advertisement -

தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார் ஜெகன். அதுதான் அவர் நடித்து வெளியான கடைசிப் படம். விஜய் டி.வியின் `கனெக்‌ஷன்’ ஷோவை தொகுத்து வழங்கியவர்.

-விளம்பரம்-
Image result for Vijay Tv Jagan

அந்த ஷோவை முடித்தக் கையோடு, கடந்த சில வருடங்களாக அவர் நடித்த கிட்டத்தட்ட 6 படங்கள் ரிலீஸ் ஆகாமல் விரக்தியில் இருக்கிறார் ஜெகன்.
2005-ம் ஆண்டு வெளியான `கண்ட நாள் முதலாய்’ படத்தின் வாயிலாக அறிமுகமானவர் ஜெகன். அதன்பிறகு `அயன்’ படத்தில் பரிட்சயமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : அரை குறை ஆடைக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.! இவங்களும் இந்திக்கு போறாங்களோ.! 

- Advertisement -

ஆனால், கடந்த 4 வருடங்களாக இவரை திரைப்படங்களில் காணவே முடியவில்லை. `எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை’, `முகம்’, `அசுர குரு’,  `கதை அல்ல நிஜம்’, `சகுந்தலாவின் காதலன்’, ஜோதிகா, ரேவதி நடித்து வரும் `production no.11′ என `6-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். எப்போது இந்தப் படங்கள் ரிலீஸாகும் என்கிற ஆர்வத்தில் இருக்கிறார் ஜெகன்.

இதுகுறித்து பேசியுள்ள ஜெகன், தொடர்ந்து இரண்டு, மூன்று வருடங்களாக நான் நடித்த படங்கள் ரிலீஸாகவில்லை. ஒருவேளை நான் நடித்த 6 படங்கள் ரிலீஸ் ஆனால் இந்த வருஷம் ஹாட்ரிக் ஹிட் எனக்குக் கிடைக்கும். அதனால், `எப்போ சார் அந்த 6 படத்தையும் ரிலீஸ் பண்ணுவீங்க’னு வடிவேல் தொனியில்தான் கேட்கவேண்டியிருக்கு” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement