வெள்ளித்திரை படங்களைவிட சின்னத்திரை நிகழ்ச்சி, சீரியல்களும் தான் மக்கள் மத்தியில் பெரிதும் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலில் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அதிலும் சமீபகாலமாக நகைச்சுவை கலந்த ரியாலிட்டி ஷோக்களை வழங்குவதில் முதல் இடத்தில் விஜய் டிவி இருக்கிறது என்று சொல்லலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எந்த ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த அளவிற்கு விஜய் டிவிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சிகளை விட அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான் மக்கள் மத்தியில் அதிகமாக இடம் பிடிக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளர்களின் பட்டியலில் மாகாபாவும் ஒருவர். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இதையும் பாருங்க : கமலுக்கு கொரோனா, பிக் பாஸ் டீமின் முடிவு என்ன ? எலிமினேஷன் ஒத்தி வைப்பா ? இல்லை வேறு யாரவது வர திட்டமா ?

Advertisement

ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார் மாகாபா ஆனந்த். பின் இவர் “சினிமா காரம் காபி” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி விஜய் டிவியில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதற்குப் பிறகு இவர் சின்னத்திரையில் பிரபலமாகி விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஆங்கரிங் செய்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர், கிங்ஸ் ஆப் டான்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, முரட்டு சிங்கிள், ராமர் வீடு என விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

மேலும், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார். இதனை தொடர்ந்து நவரச திலகம், கடலை, மீசைய முறுக்கு, பஞ்சுமிட்டாய், மாணிக் உள்ளிட்ட பல படங்களில் மாகாபா ஆனந்த் நடித்திருக்கிறார். தற்போது இவர் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் பிரபல ஆங்கராக இருக்கும் மாகாபா ஆனந்த் உடைய ஒருநாள் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இவர் ஒரு நாள் எபிசோடுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்தும், இதற்கு மாகாபா தகுதியானவர் என்று பாராட்டியும் வருகின்றனர்.

Advertisement
Advertisement