அடேங்கப்பா இவ்ளோ பெரிய வீடா ? மைனா நந்தியின் Home Tour வீடியோவை கண்டு வியந்த ரசிகர்கள்.

0
701
myna
- Advertisement -

மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் மைனா நந்தினி. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நந்தினி நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பிறகு இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும், சில வருடங்களுக்கு முன் மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு பிறகு நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குனராக யோகேஸ்வரன் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

- Advertisement -

நந்தினி யூடியூப் சேனல்:

இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான். பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டுமில்லாமல் மைனா நந்தினியும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து யூடியூபில் தனியாக சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் அடிக்கடி வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

நந்தினி புது வீடு:

இவர் பதிவிடும் வீடியோ எல்லாம் யூட்டூபில் வைரலாகி வருகிறது. மேலும், இவர்கள் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். அதேபோல் இவர்கள் கலந்துகொண்டிருந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இப்படி ஒரு நிலையில் நந்தினி புதிதாக பெரிய வீடு வாங்கி உள்ளார் என்று சோசியல் மீடியாவில் தகவல் பரவிவருகிறது. மைனா விங்க்ஸ் யூ டியூப் சேனலில் வீடு ஷிஃப்ட் செய்யப் போகிறோம் என்று நந்தினி பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

நந்தினி விளக்கம் கொடுத்த வீடியோ:

அதோடு வீட்டில் பால் காய்ச்சும் வீடியோவும் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மைனா நந்தினிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அதில் சில பேர் எப்ப வீடு வாங்கினீங்கா? என்று கேட்டு வருகிறார்கள். இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் நந்தினி தன்னுடைய வீடியோவில் கூறியிருப்பது, இதுதான் எங்கள் புது வீடு. ரொம்ப பெரிய வீடு. ஆனால், நாங்க சொந்தமாக வாங்கிய வீடு கிடையாது. வாடகை வீடு. எல்லோரும் நாங்க வீடு வாங்கி விட்டதாக சொல்கிறார்கள். அது உண்மை இல்லை. இது வாடகை வீடு தான். நாங்கள் புது வீடு வாங்க இன்னும் 20 வருஷம் ஆகும்.

நந்தினி நடிக்கும் படங்கள்:

யோகேஷ் ஆசைப்படி இந்த வீட்டின் ஹாலில் விலை உயர்ந்த ரெக்லைனர் வாங்கி வைத்து இருக்கிறோம். இது யோகியின் சின்ன வயசு ஆசை என்று கூறி இருக்கிறார். மேலும், இதற்கு முன்னர் நந்தினியும் யோகியும் அபார்ட்மெண்டில் குடியிருந்தனர். தற்போது 3 BHK கொண்ட தனி வீட்டில் குடியேறி உள்ளனர். தற்போது நந்தினி பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

Advertisement