ரெட்டை ஜடை பால் வடியும் முகம் – தனது சிறு வயது புகைப்படத்தை பதிவிட்ட ரம்யா.

0
1115
Ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான். இவருக்கு பின்னர் தான் பாவனா, பிரியங்கா எல்லாம் வந்தார்கள். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா.

-விளம்பரம்-

பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ரம்யா, தற்போது இளைய தளபதி நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் நடிகை ரம்யா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதவிடுபவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரம்யா. அந்த புகைப்படத்தை பகிர்ந்த ரம்யா, யார் என்று தெரிகிறதா என்று கேள்வியையும் கேட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement