பல வருடங்களுக்கு பின்னர் அவரை சந்திச்ச போது அவர் கேட்ட கேள்வி எனக்கு ஷாக்கா இருந்துச்சி - ரம்யா

By Rajkumar · 12/1/2020

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜீத். கடந்த வருடம் தல அஜித் நடித்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தல அஜித் அவர்கள் "வலிமை" என்ற படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய குழுவினரே அஜித்தின் வலிமைப் படுத்திலும் பணியாற்றுகிறார்கள் எனவும் அறிவித்தார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எனவும் தெரியவந்து உள்ளது.

இந்நிலையில் எப்பவுமே தல அஜித் அவர்கள் மீடியா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். இது அனைவருக்குமே தெரியும். மேலும், தல அஜீத் அவர்களை சந்தித்துப் பேசும் பல பிரபலங்கள் அவருடைய குணத்தை பற்றியும், அவரை பற்றியும் பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு பல விஷயங்களை சொல்லுவார்கள். அந்த வகையில் தல அஜித்தை சந்தித்த தருணத்தைப் பற்றி பிரபல டிவி தொகுப்பாளர் ரம்யா அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்று பேட்டியில் கூறியிருந்தார். தமிழ் ரசிங்கர்களுக்கு பரிட்சயமான தொகுப்பாளர்களுள் ரம்யாவும் ஒருவர். இவர் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ் பெற்றவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் ரம்யா சுப்பிரமணியர்.

இதையும் பாருங்க : 6000 ரூபாய்தான் வெச்சுக்கிட்டு ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்போறேன்னு சொன்னப்போ எல்லாரும் சிரிச்சாங்க – நிஜமான நெடுமாறனின் கதை.

அதுமட்டும் இல்லாமல் ரம்யா அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளரை தாண்டி தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ரம்யா அவர்கள் அஜித்தின் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது ரம்யா அவர்கள் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரம்யா அவர்கள் அஜித்தின் பில்லா படத்தின் ரிலீஸ் சமயத்தில் அஜீத்தை சந்தித்து பேட்டி எடுத்து உள்ளார். அதன் பிறகும் சில முறை அஜீத் அவர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்படி பேசி இருக்கும் போது ஒரு முறை ரம்யா அவர்கள் தனது வீட்டின் நாய் பெயரை கூறி இருந்தாராம்.

வீடியோவில் 4 நிமிடத்திற்கு மேல் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=qcKhdaxMeHI

நீண்ட காலத்திற்குப் பிறகு விஜே ரம்யாவை சந்தித்த தல அஜித் அவர்கள், "உங்களுடைய டைகர் எப்படி இருக்கு, அம்மா எப்படி இருக்காங்க" என்று அஜித் கேட்டு உள்ளாராம். இதைக் கேட்டு விஜே ரம்யா அவர்கள் பிரம்மிப்பாக நின்றதாக அறிவித்து உள்ளார். இது குறித்து ரம்யா கூறியது, பொதுவாகவே தல அஜித் அவர்கள் அனைவர் பற்றியும் நலம் விசாரிப்பார். எப்போதோ ஒருமுறை நான் கூறிய விஷயம் நினைவில் வைத்துக் கொண்டு நீண்ட காலத்திற்குப் பிறகு கேட்டது என்னை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்தியது. உண்மையாலுமே யாரும் இந்த மாதிரி கேட்க மாட்டார்கள். உறவினர்களைப் பற்றி கேட்பதே இந்த காலத்தில் அரிது, அதுவும் வாயில்லா பிராணிக்கு முக்கியத்துவம் கொடுத்து கேட்டது மூலம் அவர் வேற லெவல். அஜித் அவர்கள் உன்னதமான மனிதர். இவரைப் போல என் வாழ்வில் நான் யாரையும் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full