6000 ரூபாய்தான் வெச்சுக்கிட்டு ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்போறேன்னு சொன்னப்போ எல்லாரும் சிரிச்சாங்க – நிஜமான நெடுமாறனின் கதை.

0
45949
surarai-potru
- Advertisement -

பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகியுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.

-விளம்பரம்-

இந்த டீசர் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இது மற்ற பயோபிக் படங்களை போல இல்லாமல் முழுக்க முழுக்க இது அவரின் வாழ்க்கை கதையாக இருக்காது. இந்த படம் அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தி இருந்தாலும் முழுமையாக ஜி.ஆர்.கோபிநாத் படம் தான் என்று சொல்லும் அளவிற்கு இருக்காது.

இதையும் பாருங்க : சீரியல்லதான் வில்லி, ஆனால், நிஜத்தில்.மேடையில் கதறி அழுத ரோஜா சீரியல் நடிகை.

- Advertisement -

ஜி.ஆர்.கோபிநாத் அவர்கள் ஆரம்பத்தில் ராணுவ விமான கேப்டனாக பணியாற்றியவர். இவர் 1978 ஆம் ஆண்டு நடந்த பங்களாதேஷ் பிரிவினை போது போர் விமானங்களை இயக்கி இருந்தார். அதன் பின்னர் தனது 28 வயதில் ராணுவ ஓய்வு வாங்கிக் கொண்டு சொந்த ஊரான கர்நாடகாவிற்கு வந்து விட்டார். பின் தன்னுடைய சொந்த ஊரில் சில தொழில்களை செய்து வந்தார். இவர் குறைந்த செலவில் விமான பயணத்தை தரும் திட்டம் ஒன்றை செய்யலாம் என்று நினைத்தார். அதற்கு முதலில் விமான நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும். அப்போது அவர் கையில் இருந்தது வெறும் 6,000 ரூபாய் மட்டும் தான். அதை வைத்துக் கொண்டு ஒரு ஏரோப்பிளேன் கம்பெனி ஆரம்பிக்க போகிறேன் என்று சொன்னபோது அனைவரும் கிண்டல் கேலியும் செய்தார்கள்.

G. R. Gopinath

-விளம்பரம்-

தனி விமான நிறுவனம் ஒன்றை தொடங்கலாம் என்று யோசித்ததில் இருந்தே கோபிநாத்துக்கு வாழ்க்கையில் பல தோல்விகள், அவமானங்கள் அடிமேல் அடி என வந்து கொண்டிருக்கிறது. பல வருடங்கள் போராட்டத்துக்குப் பிறகு அனுமதி பெற்று கோபிநாத் அவர்கள் 2003 ஆம் ஆண்டு “ஏர் டெக்கான்” என்ற விமான நிறுவனத்தை தொடங்கினார். பின் 18 இருக்கைகள் கொண்ட விமானங்களை குறைந்த செலவில் அவர் இயக்கி வந்தார். ஆரம்பத்தில் இவர் விமானப் போக்குவரத்து இல்லாத குஜராத் போன்ற பகுதிகளில் இந்த விமானத்தை பயணித்தார். அப்போது மிகப் பெரிய ஜாம்பவானாக இருந்த டாடா போன்றவர்களுடன் விமான நிறுவனம் நிறுவ சாத்தியமில்லாமல் இருந்தது. பின் 500 பைலட், 45 விமானம் இவரிடம் இருந்தாலும் வியாபார ரீதியாக கோபிநாத்துக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.

மேலும், வணிக பிரச்சனைகள் ஏற்பட்டவுடன் 2007 ஆம் ஆண்டு மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துடன் தன்னுடைய நிறுவனத்தை இணைத்து தனக்கான அங்கீகாரத்தை இழக்கத் தொடங்கினார். பின் மீண்டும் தன்னுடைய வாழ்க்கையில் ஒன்றும் இல்லாதவராய் நின்றார். இடைப்பட்ட காலத்தில் தனக்கு கிடைத்த பணத்தில் சரக்கு விமானம், தனிப்பட்ட விமானம் என்ற பல முயற்சிகளை செய்து வந்தார். அதன் பின்னர் மல்லையாவின் கையிலிருந்து பங்குகள் முழுவதையும் தனதாக்கிக் கொண்டு அதே டெக்கான் என்ற பெயரில் அரசு திட்டத்தின் அடிப்படையில் இயக்கத் தொடங்கினார். இன்று 34க்கும் மேற்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்கி உயர்ந்துள்ளார்.

Image result for g r gopinath

இவர் எப்படி தன் வாழ்க்கையில் தனிமனிதனாக போராடி உயர்ந்து உள்ளார் என்பது தான் படத்தின் கதை. இந்த விமானங்கள் எல்லாம் பெரும்பாலும் வட மாநிலங்களில் தான் இயங்கி வருகின்றன. அரசு அனுமதியுடன் அதிகபட்ச நிர்ணயம் 2500 ரூபாய் மட்டும் தான். 2017 ஆம் ஆண்டு மும்பை– நாசிக் நகரங்களுக்கு இடையே இந்த விமானம் இயக்கப்பட்டது. எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த ஏர் டெக்கான் வரும் என்றும் திட்டமிட்டுள்ளார்.

Advertisement