இப்படியெல்லாம் போஸ் கொடுக்காதீங்க. ரம்யாவின் ஈர உடை புகைப்படத்தை கண்டு புலம்பும் ரசிகர்கள்.

0
45988
vj-ramya
- Advertisement -

சீரியல் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பல்வேறு பெண் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, ரம்யா, பாவனா போன்ற பல்வேறு பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-3-1024x979.jpg

மேலும், ரம்யாவிற்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறார்கள். 2014 ஆம் ஆண்டு சென்னை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் ரம்யா. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

திருமணத்திற்குப் பின்னர் இனி தொலைக்காட்சிகளில் பணியாற்ற மாட்டேன் என்று அறிவித்திருந்தார் ரம்யா. ஆனால், திருமணம் முடிந்த ஓராண்டு காலத் திலேயே விவாகரத்து செய்துவிட்டார். தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த போதே 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா. அதன் பின்னர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். விவாகரத்துக்கு பின்னரும் தொடர்ந்து தனது தொகுப்பாளர் பணியை செய்து வந்த ரம்யா, மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

This image has an empty alt attribute; its file name is 2-3-950x1024.jpg

இது மட்டுமல்லாது சமீபத்தில் நடைபெற்ற பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். ரம்யா இதனால் இவரது பல்வேறு ரசிகர்கள் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் பிரபல வானிலை மையமான நபீக் எஃப்எம் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் மேலும் சமீபத்தில் வெளியான ஆடை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் நடிப்பு பெரிதும் பாராட்டப் பெற்றது. தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் நடிகைகளைப் போல தனது உடலை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார் ரம்யா.

-விளம்பரம்-

எப்போதும் ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்து வருகிறார். மேலும், ஜிமில் எடுத்துக்கொண்ட எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி போட்டிகளை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல்குளத்தில் ஈரமான உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் பலரும் இப்படி எல்லாம் போஸ் கொடுக்காதீங்க என்று புலம்பி வருகின்றனர். தற்போது ரம்யா தங்கத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது.

Advertisement