ஒன்றரை ஆண்டு கழித்து திரௌபதி படத்தை வாங்கிய பிரபல டிவி – இனி எத்தன முறை போட்டு காண்பிக்க போறாங்களோ ?

0
1258
Draupathi
- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் கிரிவலம் நாளை யுகா தமிழகம் பெண் சிங்கம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்னதான் அஜித்தின் மைத்துனர் ஆக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி இருந்தார்.

- Advertisement -

இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகிஇருந்தது. மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியும். சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி.ஆனால், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக காண்பித்து விட்டார் மோகன் என்று ஒரு சர்ச்சையும் வெடித்தது.

இந்த படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. கிட்ட தட்ட இந்த படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் வெளியான நிலையில் இந்த படத்தின் டிவி உரிமையை விஜய் டிவி பெற்று இருக்கிறது. இதனை மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே விஜய் டிவியில் வாங்கிய படங்களை பல நூறு தடவை போட்டு காண்பித்து வருகின்றனர். தற்போது திரௌபதி படத்தை எத்தனை முறை போட்டுக் காண்பிப்பார்கள் என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement