மகன் இருக்கும் நிலையில் மனைவியை பிரிந்த பகல் நிலவு சீரியல் நடிகர் – இவங்க தான் அவர் மனைவி.

0
3114
azeem-1
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என்று பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை அஸீம். இப்படி ஒரு நிலையில் இவர் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்க சட்டப்படி பிரிஞ்சிட்டோம். பரஸ்பரம் ஒப்புக்கொண்டு இந்த விவாகரத்து கிடைத்துள்ளது. ஆனால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் பேச நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு தான் இவருக்கும் பகல் நிலவு தொடரில் நடித்த நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக அஸீமுடன் நடித்த சிலர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்து இருந்தனர். இது குறித்து அந்த குறிப்பிட்ட பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அஸீமிற்கு ஸோயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு மூன்று வருடங்கள் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். இடையில் தற்போது பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று இருக்கிறது என்று அஸீமுடன் நடித்த நடிகர் ஒருவர் கூறியதாக அந்த பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் அசீம் நடவடிக்கை குறித்து டெக்னீஷியன் ஒருவர் பேசியதாவது அந்த பொண்ணு மிகவும் பாவம் சார் எங்களை பொறுத்தவரை இவர் மேல் தான் தப்பு அவருடைய குணமே அப்படித்தான். ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், அங்கு இவர் படப்பிடிப்பு தளத்தில் செய்த சில செயல்பாடுகள் பிடிக்காததால் அந்தத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதில் அவருக்கு ஜோடியாக ஒரு பெண் அறிமுகமானார். அது தற்போதுதான் பள்ளிக்கூடம் செல்லும் பெண். ஆனால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.

இதனால் அசீம் வீட்டில் பிரச்சனை தொடங்கி இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை ஷூட்டிங் ஸ்பாட் வரை வந்து விட்டது அதன் பின்னர் தான் எங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. இப்போது எந்த விஷயத்தில் அஸீம் தனது மனைவியை சல்மாவை டார்ச்சர் செய்து வருவதாகவும் கூறுகிறார்கள் என்று அந்த டெக்னீசியன் கூறியிருந்தார் என்றும் தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் அசீமின் திருமண புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement