இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குகிறார் மணிரத்தனம்.
மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தவர்கள்,. கொரோனா பிரச்சனை காரணமாக அந்தத் திட்டத்தை கைவிட்டனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஆயுத எழுத்து சீரியல் நடிகர் அம்ஜத் கான் கமிட் ஆகியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது “ஆயுத எழுத்து”. ஆயுத எழுத்து சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அம்ஜத் கான். இந்த சீரியல் வந்த கொஞ்ச நாட்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடித்த அம்ஜித், ஸ்ரீத்து இருவருமே திடீரென விலகி விட்டார்கள். அதனால், அவர்களுக்கு பதிலாக ஆனந்த் மற்றும் சரண்யா சுந்தராஜ்நடித்து வந்தனர். நடிகர் அம்ஜத்துக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து உள்ளதால் தான் ஆயுத எழுத்து சீரியலில் விலகிவிட்டார் என்று தகவல்கள் வெளியானது.
இவர் சின்னத்திரை சீரியலில் நடிப்பதற்கு முன் சினிமாவில் சில படங்களில் நடித்து உள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான புகைப்படம் என்ற திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து வல்லினம், மாயா, நட்பதிகாரம், நெடுநல்வாடை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.அதே போல இவர் கைதி படத்திலும் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் பொன்னியின் செல்வனில் நடிக்கிரறாம். இதற்காக 90 நாட்களில் தனது உடல் வடிவத்தை மாற்ற கடுமையாக உடற் பயிற்சிகளை செய்து வருகிறார்.