தனக்கு குழந்தை பிறந்ததை அழகான புகைப்படத்துடன் அறிவித்த விஜய் டிவி நடிகர் வினோத் பாபு.

By Rajkumar · 30/10/2021

விஜய் டிவி சீரியல் நடிகர் வினோத் பாபுவிற்கு குழந்தை பிறந்துள்ளது. விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல், குடும்பம், அரசியல் ஆகிய பின்னணியில் உருவாகி இருந்தது. இந்த தொடரை அப்துல் கபீஸ் என்பவர் இயக்கி இருந்தார்.

மேலும், இந்த தொடரில் முன்னணி நடிகர்களாக வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினிநடித்தனர். ஆனால், இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த வினோத் பாபு ஆரம்பத்தில் ஒரு நடன கலைஞ்சராக இருந்தவர்.அதன் பின்னர் காமெடி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகவும் திகழ்ந்து வந்தார். ஆனால், இவர் பிரபலமானது என்னவோ சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் மூலம் தான்.

இதையும் பாருங்க : பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறியது யார் ? - தீபாவளிய வீட்டில் கொண்டாடப் போகும் நபர் இவர் தான்.

அதன் பின்னர் இவர் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்றார். மேலும், இவர் தென்றல் வந்து என்னை தொடும் என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். வினோத் பாபுவிற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீர் திருமணம் நடந்த நிலையில் இவரது மனைவி கர்ப்பமாக இருந்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற இவரது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி கூட நடைபெற்றது.

இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்டார் வினோத் பாபு. இப்படி ஒரு நிலையில் வினோத் பாபு- சிந்து தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை மிகவும் அழகான புகைப்படத்தோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் வினோத் பாபு. இந்த செய்தியை கேட்டு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Tamil Behind Talkies AMP · Quick view
View full