பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறியது யார் ? – தீபாவளிய வீட்டில் கொண்டாடப் போகும் நபர் இவர் தான்.

0
3848
bb
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நான்காவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது இதுவரை நமிதா மாரிமுத்து நாடியா அபிஷேக் என்று மூவர் வெளியேறி இருக்கும் நிலையில் இந்தவார நாமினேஷனில் இந்த வாரம் அபினை, சின்ன பொண்ணு, வருண், பிரியங்கா, ஸ்ருதி, அக்ஷரா, பாவனி, இமான், இசை வாணி என்று 9 பேர் இருக்கின்றனர். இதில் பஞ்ச தந்திர காயினை வைத்திருந்த இசைவாணி, வருண், பாவானி ஆகிய மூவருக்கும் ஒரு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது.

-விளம்பரம்-

அதாவது அவர்களுக்கு பதிலாக அவர்களின் காயினை பயன்படுத்தி வேறு யாரையாவது நாமினேட் செய்து கொள்ளலாம் என்று சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், மூவருமே அந்த சலுகையை ஏற்க மறுத்து நாமினேஷனில் தொடர்ந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. பல தனியார் வலைதளங்களில் நடத்தப்பட்ட ஓட்டிங்கில் சின்னபொண்ணு, அபிநய், இசை ஆகிய மூவருக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகின.

இதையும் பாருங்க : தாமரை குறித்து அன்றே கணித்த பிரியங்கா – வெளி வரும் தாமரையின் உண்மை முகம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் சின்ன பொண்ணு வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் வயதில் மூத்த போட்டியாளர்கள் தான் வெளியேறுவார்கள். ஆனால், இந்த சீசனில் தான் அப்படி நடக்கவில்லை. முதல் வாரத்தில் நாடியாவும், இரண்டாம் வாரத்தில் அபிஷேக்க்கும் வெளியேறினார்.

இப்படி ஒரு நிலையில் முதல் வாரமே வெளியேற்றப்பட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சின்ன பொண்ணு முன்றாவது எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஒரு வேலை அவரை வேறு யாரவது தங்கள் காயினை வைத்து காப்பாற்றினார்களா என்பதை நாளை தான் பார்க்கவேண்டும். ஆனால், அவருக்கு அந்த மாதிரி சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும் கூறுப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement