தற்போது இருக்கும் காலகட்டத்தில் வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் திகழ்ந்து வருகிறார்கள். குறுகிய காலத்திலேயே சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் கிடைத்து விடுகிறது. அந்த வகையில் தனெக்கென ரசிகர் கூட்டத்தை கொண்டவர் நடிகை ஜனனி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமா கொண்டவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ என்ற தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தார். சின்னத்திரையில் இவர் பிரபலம் என்றாலும் இவர் அறிமுகமானது என்னவோ சினிமாவில் தான்.

இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருந்த நண்பேன்டா என்ற படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மாப்பிள்ளை தொடர் தான். அந்த சீரியலுக்கு பின்னர் அடுத்தடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் செம்பருத்தி, ஆயுத எழுத்து என்ற பிரபலமான சீரியல்களில் நடித்து வருகிறார்.

Advertisement

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் நடிகை ஜனனி அவர்கள் வீடியோகால் மூலம் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் உங்களுடைய உடல் எடை குறைவதற்கான ரகசியத்தை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு ஜனனி அவர்கள் கூறியது, நான் இப்போ டயட் மெயின்டன் பண்ணவில்லை. லாக் டவுனுக்கு முன்னாடி தான் நான் டயட் மெயின்டன் பண்ணினேன். அப்போது நான் நாலு மணி நேரம் மட்டும் சாப்பிட ப்ளான் வைத்திருந்தேன். இது மூலமா தான் எனக்கு உடம்பு குறைய ஆரம்பித்தது.

அது எனக்கு உடம்பு குறைவது மட்டுமில்லாமல் எனக்கு ஸ்ட்ரென்த் ஆகவும் இருந்தது. நான் இப்ப கம்ப்ளீட்டா டைரி புரோடக்ட் பால், டீ, காபி எதையும் சாப்பிடுவதில்லை. nonveg எதுவுமே சாப்பிடுவதில்லை. நான் பழங்கள், காய்கறிகள் மட்டும் தான் சாப்பிட்டு வந்தேன். நாலு மணி நேரம் மட்டும் சாப்பிட்டு மீதி நேரமெல்லாம் உடற்பயிற்சி செய்து தண்ணீர் மட்டும் குடித்து வந்தேன். இதை நான் மூணு மாசம் செய்தேன் என்று கூறினார்.

Advertisement
Advertisement