எந்த பயனும் இல்லை – முதன் முறையாக தனது விவாகரத்து குறித்து பேசிய விஜய் டிவி சீரியல் நடிகை.

0
4275
megna
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் இருக்கும் எத்தனையோ பிரபலங்களின் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. ரம்யா,டிடி,மைனா,பவானி ரெட்டி என்று இப்படி எத்தனையோ விஜய் டிவி பிரபலங்கள் விவாகரத்து பெற்றவர்கள் தான். அந்த வகையில் சமீபத்தில் விவாகரத்தானவர் பொன்மகள் வந்தால் சீரியல் நடிகை மேக்னா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் ‘தெய்வம் தந்த வீடு’ தொடரும் ஒன்று. 2013 ஆம் ஆண்டு துவங்கிய 2017 வரை ஒளிபரப்பானது. ரசிகர்களின் ஆதரவால் இந்த தொடர் 992 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

-விளம்பரம்-
முன்னாள் கணவருடன் மேக்னா

நடிகை மேக்னா கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் டான் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகை மேக்னா தனது கணவரை கடந்த சில மாதத்திற்கு முன்னர் விவாகரத்து செய்து கொண்டார். நடிகை மேக்னா, திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்து தனியாக தான் வசித்து வந்தார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மேக்னா, முதன் முறையாக தனது விவகாரத்து குறித்து பேசியுள்ளார். அதில், அனைவருமே என்னுடைய விவாகரத்து பற்றி கேட்கிறார்கள். அது முடிந்துவிட்டது, நமது கடந்த காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றி பேசுவதில் எந்த பயனும் இல்லை. சரிதானே? பலரும் விவாகரத்து குறித்து கேட்டுவிட்டு ஏன் இதற்கு பதில் அளிக்க மாட்டீர்களா என்று கேள்வி கேட்கிறார்கள் நான் ஏன் இதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டும் ? இது குறித்து நான் எந்த பேட்டியிலும் பேசியது கூட கிடையாது. கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி அதைப்பற்றி யோசிப்பது தேவையில்லாத விஷயம் என்று நினைக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்

This image has an empty alt attribute; its file name is 97995524_536489303706705_3807301831445446656_n.jpg

தனது இரண்டாம் மனைவியுடன் டான் டோனி

-விளம்பரம்-

விவாகரத்திற்கான காரணத்தை கூறிய மேக்னாவின் கணவர், ஒரு வருஷம்தான் நாங்க சேர்ந்து இருந்தோம். பிறகு எங்களுக்குள்ள செட் ஆகலை. அதுதான் பிரிவுக்குக் காரணம். அதனால்தான் விவாகரத்துக்குப் போனோம். மேக்னா இப்ப சென்னையிலேயே செட்டிலாகிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். விவாகரத்து கிடைச்சு ரெண்டு மூணு மாசம் ஆகிடுச்சு என்று கூறியுள்ளார். சமீபத்தில் தான் இவர், டான் டோனி, டிவைன் கிளாரா மணிமுறையல் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement