கர்பமாக இருக்கும் வேளையில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை சமீரா.

By Rajkumar · 20/4/2021

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய `பகல் நிலவு' சீரியல் இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்தது. இந்த தொடரில் நடித்த அன்வர் சமீரா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்கள். 700-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தொடரில் இருந்து அன்வர் மற்றும் சமீரா ஜோடி வெளியேறினார்.

விக்னேஷ் கார்த்திக் - சௌந்தர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைந்ததாகவும், அன்வர் கதையில் குறுக்கிட்டு டாமினேட் செய்ததே அதற்குக் காரணம் என்றும் பேசப்பட்டது. அதன் பின்னர் கார்த்திக் மற்றும் சௌந்தர்யா ஜோடியும் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்கள். அன்வர்-- சமீரா அவர்கள் நவம்பர் 11ஆம் தேதி மாலை பௌர்ணமி நிலவில் இருவரும் மணம் முடித்து தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள். மேலும்,ஹைதராபாத்தில் உள்ள சமீரா வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்தது.

இதையும் பாருங்க : ராணி முகர்ஜினு நெனச்சோட்டம் - ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளாமர் ஷூட்டை புகழ்ந்த ரசிகர் (இது கொஞ்சம் ஓவரா இல்ல)

ரியல் காதலர்களாக இருந்த அன்வர்-- சமீரா பகல் நிலவு சீரியலில் காதலர்களாக நடித்ததால் அந்த சீரியல் செம ஹிட். பகல் நிலவு சீரியலுக்கு பின் சமீரா, ஜீ தமிழில் ஒளிபரப்பான 'றெக்க கட்டி பறக்குது மனசு' என்ற தொடரை தயாரித்து அதில் ஹீரோயினியாகவும் நடித்து இருந்தார். 'பொன்மகள் வந்தாள்' தொடர் மூலம் அன்வர் தயாரிப்பு பக்கம் வந்தார். இந்நிலையில் றெக்க கட்டி பறக்குது சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் வெற்றிகரமாக முடிந்தது.

https://twitter.com/chettyrajubhai/status/1384391780058025985

இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் யூடுயூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு 'நாங்கள் இனி கணவன் மனைவி' இல்லை என்று தலைப்பை வைத்திருந்தனர். இதை பார்த்த பலர் என்ன எதோ என்று பதறிப்போய் அந்த வீடியோவை பார்த்தால், சமீரா கர்ப்பமாக இருப்பதை சொல்லத்தான் இருவரும் இப்படி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்களாம். இந்த நிலையில் நடிகை சமீரா 'என்ஜாய் எஞ்சாமி' பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full