விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா பாண்டியன் ஒருவர். நடிகை ரம்யா பாண்டியன் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.மேலும், ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம். இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர்.
அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.
இதையும் பாருங்க : ஆங்கிலோ இந்தியன் பெண்ணுடன் திருமணம். 15 வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய ம க பா – குவியும் வாழ்த்துக்கள.
அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை வந்த ரம்யா பாண்டியனுக்கு நான்காம் இடம் தான் கிடைத்தது. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் இவருக்கு சமூக வலைதளத்தில் அந்த அளவிற்கு ஹேட்டர்ஸ் என்பது இல்லாமல் தான் இருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பல ஹேட்டர்ஸ்கள் உருவாகினர். இருந்தாலும் போட்டோ ஷூட்களை மறக்காத ரம்யா பாண்டியன் சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியன் சட்டையை ஒருபுறம் இறக்கி கிளாமரான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் ராணி முகர்ஜி மாதிரி இருக்கீங்க என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். இது ஒருபுறம் இருக்க ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.