சன் டிவி சீரியல்களை அடித்து நொறுக்கு டாப்பில் வந்த விஜய் டிவி சீரியல் – இந்த வார TRP லிஸ்ட் இதோ

0
483
- Advertisement -

தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. இதனால் சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.

-விளம்பரம்-

வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி, விஜய் டிவி திகழ்கிறது. அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி, விஜய் டிவி சீரியல் தான் முன்னிலை வகுத்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சிங்க பெண்ணே சீரியல்

முதலிடத்தை சிங்க பெண்ணே சீரியல் பிடித்திருக்கிறது. இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் 11.59. தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் ஆனந்தி. இவருடன் சில பெண்களும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

Kayal

கயல் சீரியல்.

டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது. 11.55 புள்ளி பிடித்து இருக்கிறது. இந்த சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோசத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
sundari

சுந்தரி 2 சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதில் சுந்தரி கலெக்டராக இருக்கிறார். மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். இந்த சுந்தரி 2 சீரியல் 10.04 TRP ஆகும்.

எதிர்நீச்சல் சீரியல்:

டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் நான்காம் இடத்தை பிடித்து இருக்கிறது. 9.76 ரேட்டிங்க் ஆகும். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்கள் உரிமையை மையமாக கொண்ட கதை. அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் ஆதி குணசேகரன் ஸ்கோர் செய்து வருகிறார்.

Vanathai

வானத்தைப்போல:

இந்த தொடர் டி ஆர் பி ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 9.42 ரேட்டிங்க் ஆகும். இது அண்ணன்- தங்கை சென்டிமென்ட்டை மையமாக கொண்ட கதை. இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார். பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

இனியா:

இந்த சீரியல் டிஆர்பி 8.20 ஆகும். இந்த தொடரில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி முதல் ஆறிடங்களை சன் டிவி சீரியல்கள் பிடித்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியல்:

ஏழாவது இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க சீரியல் பிடித்து இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நல் இருந்து தற்போது வரை பரபரப்பாகவும், எதிர்பார்ப்புடனும் சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் இந்த சீரியல் தான் டி ஆர் பியில்முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி 7.72 ஆகும்.

எட்டாவது இடத்தில் ஆனந்த ராகம் சீரியல் இருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி 7.45 ஆகும்.

ஒன்பதாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி 7.22 ஆகும்.

10வது இடத்தில் ஆஹா கல்யாணம் சீரியல் பிடித்திருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி 6.88 ஆகும்.

Advertisement