விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஒன்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக ஆண்டு வரவேற்பை வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பிரபலமாக இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பலமுறை வியக்க வைத்திருக்கிறார். அஜய் கிருஷ்ணா சென்னையை சேர்ந்தவர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார்.
அஜய் கிருஷ்ணா குறித்த தகவல்:
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு படங்களில் பாட வாய்ப்பு கிடைத்தது. பின் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பாடல்களை பாடி வருகிறார். அஜய் கிருஷ்ணா தற்போது பின்னணி பாடகராக திகழ்கிறார். இதற்கிடையில் அஜய் கிருஷ்ணாவுக்கும் ஜெஸிக்கும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
https://www.youtube.com/shorts/Mp8oWR5vQYs?app=desktop
அஜய் கிருஷ்ணா திருமணம்:
இது முழுக்க முழுக்க காதல் திருமணம். பின் அஜய் மனைவி ஜெஸ்ஸி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதுவும் அஜய்யின் பிறந்தநாளில் இந்த பரிசை அளிப்பதாக அவரின் மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பின் இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இப்படி இருக்கும் நிலையில் பாடகர் அஜய் கிருஷ்ணா சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=gQSATfPSpy8
அஜய் கிருஷ்ணா மனைவி வளைகாப்பு:
அதாவது, அஜய் கிருஷ்ணாவின் மனைவி இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். அஜய் கிருஷ்ணா தன்னுடைய மனைவிக்கு எளிமையாக வீட்டிலேயே வளைகாப்பு நடத்தி இருந்தார். இது தொடர்பான புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






