உலகின் சிறந்த ஹாஸ்பிடல், ஆனால் நீங்க குணமாகிடும்னு போனீங்க – டாப் ஹாஸ்பிடலை கிழித்து தொங்கவிட்ட ஜாக்லின்.

0
714
jackline
- Advertisement -

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். மேலும், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘ படத்தில் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருந்தார் ஜாக்லின்.

இதையும் பாருங்க : 38 வயதில் திருமணம் முடித்த காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகை – மன மேடையில் மாறி மாறி முத்தம் கொடுத்த தம்பதிகள்.

- Advertisement -

இவர் நடித்து வந்த தேன்மொழி சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதே போல இந்த தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டது. சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையின் பிரபல மருத்துவமனையான ராமச்சந்திரா மருத்துவமனையை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், உலகின் மிகச் சிறந்த மருத்துவமனையில் மோசமான அனுபவம். நீங்க எவ்ளோ முடியலன்னு போனாலும் நீங்கள் சொல்வதை அவர்கள் காது கொடுத்து கேட்கவே மாட்டார்கள். இந்த மருத்துவமனைக்கு சென்றால் குணமாகிவிடும் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கே அதிக பணம் அதிக அலட்சியம் தான் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement