இதுக்கு பேர் புடவையா ? கேலிக்கு உள்ளான Vj பாவனாவின் வித்யாசமான லுக். வைரல் புகைப்படம்.

0
945
Bhavana-Anchor
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். டிடி துவங்கி சமீபத்தில் வந்த ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் ஏராளம். அந்தவகையில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி களில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். அதில் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் இவர் புடவையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் பேண்ட் அணிந்து கொண்டு அதில் புடவையை சுற்றிக்கொண்டு படு வித்யாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள். புடவையை இப்படி கூட கட்டலாமா? இதுக்கு பேர் தான் புடவையோ என்று கேலி செய்து வருகின்றனர்.

சமீப காலமாக பாவனாவை தமிழ் சின்னத்திரை பக்கம் காண முடிவதில்லை. சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement