இது பொறுக்கித்தனம், இப்படி ஒரு கெளவமான சீரியலை ஒளிபரப்ப கூடாது - சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவியின் புதிய சீரியல்.

By Rajkumar · 26/7/2021

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

https://twitter.com/IamPradeep_2021/status/1419373538792787969

ஆனால், சமீப காலமாகமே சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் TRPயில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு விஜய் டிவி சீரியல்கள் அதிரடியாக நிறுத்தப்பட்டு இருந்தது. அதே போல தற்போது அடுத்ததுது புதிய சீரியல்கள் துவங்க இருக்கிறது.

இதையும் பாருங்க : சட்டையை கழட்ட சொன்ன பாடி பில்டர்கள் - தனது பிட்னஸ்ஸால் அனைவரையும் அலற வைத்துள்ள பப்லு

கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல், குடும்பம், அரசியல் ஆகிய பின்னணியில் உருவாகி இருந்தது. இந்த தொடரில் முன்னணி நடிகர்களாக வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி நடித்து இருந்தனர். இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறுத்தப்பட்டது.

https://twitter.com/Mohamed54721771/status/1419346141729103874

இந்த தொடருக்கு பின்னர் வினோத் பாபு எந்த தொடரிலும் நடிக்கவில்லை என்றாலும் விஜய் டிவியின் பல்வேரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற புதிய தொடரில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த சீரியலின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த ப்ரோமோவிற்கே பல எதிர்புகள் கிளம்பியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த ப்ரோமோவில், இந்த ப்ரோமோவில் நாயகிக்கு நாயகன் அவரது சம்மதம் இல்லாமல் தாலி கட்டிவிட்டு, இப்போ நீ என் பொண்டாட்டி ஆகிடுவியா என்று வசனம் பேசுகிறார். இதை பார்த்த பலரும் இது பெண்களுக்கு எதிரான குற்றம் எப்படி இதை ஒளிபரப்பலாம் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/subiksharaman/status/1419339813111537666

ப்த்தூ னு துப்பிடுவேன், கற்ற நாகரீகம் தடுக்குது. 20, 30 ஆண்டுகளுக்கு முந்தைய பலாத்காரம் பண்ணிட்டா, முத்தம் குடுத்துட்டா, உடம்ப பார்த்துட்டா அவனுக்கே பொண்டாட்டி ஆகிடணும் கிற கிறுக்குத்தனம் இப்பதான் குறைஞ்சிருக்கு. இப்ப மறுபடியுமா!? லூசுக என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full