சட்டையை கழட்ட சொன்ன பாடி பில்டர்கள் – தனது பிட்னஸ்ஸால் அனைவரையும் அலற வைத்துள்ள பப்லு

0
45959
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் பிரித்திவிராஜ். இவரை பெரும்பாலும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ். இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது.

-விளம்பரம்-

மேலும், பல்வேரு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள பப்லு தமிழில் இவர் மர்மதேசன், அரசி, வாணி ராணி போன்ற பல்வேரு தொடர்களில் நடித்து இருக்கிறார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது இவருக்கு 55 வயதாகிறது.

இதையும் பாருங்க : படு ஸ்லிம், படு கிளாமர் – இனியாவின் லேட்டஸ்ட் Transformation. வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

ஆனால், இந்த வயதிலும் தனது உடலை படு பிட்டாக வைத்து இருக்கிறார் பப்லு. மேலும், வரும் ரியாஸ் காணும்ஜிம் பார்ட்னர்கள். இந்த நிலையில் சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் பாடி பில்டர்கள் சிலர் இவரது சட்டையை கழட்ட சொல்ல, இவரும் தன் சட்டையை கழட்டி தன்னுடைய சிக்ஸ் பேக்கை காண்பித்து அனைவரையும் அசைத்தியுள்ளார்.

ராஜ்கபூர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அவள் வருவாளா. இந்த படத்தில் அஜித் குமாருக்கு வில்ளனாக பிரிதிவீராஜ் நடித்திருந்தார். அதே போல இவரது தங்கையும் அஜித்தும் கூட பள்ளியில் ஒன்றாக படடித்தவர்கள் தான். ஒரு சமயம் அஜித் என்ற பையன் தன் தங்கையிடம் சேட்டை செய்கிறார் என்று அறிந்து இவர் விசாரிக்க சென்றாராம். பின்னர் தான் தெரிந்ததாம் அது வேற அஜித் என்று, நம்ம தல அஜித் தான் பப்லுவின் தங்கைக்கு உதவி செய்ததாக கூறி இருந்தார் பப்லு.

-விளம்பரம்-
Advertisement