அதே ட்ரெஸ், அதே ஹேர் ஸ்டைல் – வாரிசு படத்தில் விஜய்க்கு dupe போட்டது இவர் தான் – வம்சியுடன் எடுத்த புகைப்படம் இதோ.

0
1269
- Advertisement -

வாரிசு படத்தில் விஜய்க்கு டூப்பாக நடித்தவரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

காஷ்மீரில் ஷட்டிங் :

இப்படி நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர். இவர்கள் காஷ்மீர் செல்கையில் படக்குழுவின் பல புகைப்படங்களும், விடீயோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும் பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வந்தனர்.

முதல் ப்ரோமோ :

இப்படிப்பட்ட நிலையில் தான் படத்தில் முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. அந்த ப்ரோமோவில் காலை காட்சியில் சாக்கலேட் தயாரிக்கும் விஜய் இரவு நேரத்தில் வாழ் ஒன்றை தயாரிக்கிறார். பின்னர் அங்கு பல கார்கள் வருகின்றனர். விஜய் வாழில் உள்ள சாக்கலேட்டை சாப்பிடும் படி அந்த ப்ரோமோ முடிந்தது. மேலும், இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். படம் வரும் ஆக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் இப்படம் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய்க்கு மாஸ் படமாக இருக்கக்கூடம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

துணிவு டூப் சர்ச்சை :

இப்படிப்பட்ட நிலையில் “வாரிசு” படத்துடன் ஒன்றாக பொங்கலுக்கு வெளியாகிய அஜித்தின் “துணிவு” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் துணிவு படத்தில் வரும் சாகச காட்சிகளில் அஜித்திற்கு பதிலாக டூப் நடித்திருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பல விதமான விமர்சனகளை பெற்றது. ஆனால் இந்த தகவலை பொய்யானது என்றும் அஜித் தான் முழுக்க முழுக்க துணிவு படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்பட்டது.

வாரிசு படத்தில் விஜய்க்கு டூப் :

மேலும் துணிவு படத்தின் கதாநாயகியான மஞ்சு வாரியாரும், துணிவு படத்தில் நடித்த பிக் பாஸ் பிரபலங்கள் ஆமீர் மற்றும் பாவனி என பலர் படத்தில் வரும் ஜெட்ஸ்கி காட்சியில் அஜித் தான் நடித்திருக்கிறார் என்று பேட்டிகளில் கூறிவருவது குறிப்பிடதக்கது. இப்படி பட்டநிலையில் தான் துணிவு படத்துடன் வெளியாகிய வாரிசு படத்தில் விஜய்க்கு டூப் நடித்துள்ளதாக ஒரு புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement