10 வருசத்துக்கு முன்னே Docomo Adல பார்த்த மாதிரியே இருக்காரே – வாரிசு படத்தின் Exclusive புகைப்படங்களை கண்டு கொண்டாடும் ரசிகர்கள்.

0
1004
varisu
- Advertisement -

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் சில எக்ஸ்குளுசீவ் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

- Advertisement -

மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் கார்த்தியை வைத்து ‘தோழா’ படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இவர் தமிழில் இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடித்தானது தெலுங்கானாவில் தொடங்கியது.

-விளம்பரம்-

தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்றுஅதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. அதே போல அஜித்தின் வாரிசு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சமீபத்தில் கூட சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அவர்கள் ரசிகர்களை பார்த்து கைய அசைத்து விட்டு சென்றார். அப்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் வாரிசு படத்தின் சில எக்ஸ்குளுசீவ் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் விஜய் படு young and hansomeஆக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு புகைப்படத்தில் 2012 ஆம் ஆண்டு ஆண்டு விஜய் நடித்த Docomo விளம்பரத்தில் வந்தது போலவே இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் 10 Years Chellange என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement