6.01, 11.44 , 5.02 = 10, எப்படினு கேக்குறீங்களா ? விஜய்யின் ‘வாரிசு’ போஸ்டர்ஸ் வெளியான நேரங்களில் இருக்கும் ஒற்றுமை – ஒரு சுவாரசிய தகவல்.

0
608
varisu
- Advertisement -

வாரிசு படத்தின் போஸ்டர்கள் வெளியான நேரம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தளபதி 66’ படம் பற்றிய தகவல்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.
இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்:

ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு வாரிசு என பெயர் இடப்பட்டு உள்ளது. அந்த போஸ்டர் நேற்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. மேலும், நேற்று மாலை 6.01க்கு இதன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனது.

-விளம்பரம்-

அடுத்தடுத்து வெளியான போஸ்டர்:

இதனை அடுத்து இன்று காலை 11:44 மணி அளவில் விஜய்யின் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இந்த போஸ்டரில் சிறுவர் சிறுமிகளுடன் விஜய் இருக்கிறார். இவ்விரு போஸ்டர்களும் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. இதனை அடுத்த போஸ்டர் இன்று மாலை 5.02க்கு வெளியாகி உள்ளது. பொதுவாக படம் தொடர்பான அறிவிப்புகள் 6 மணி, 12 மணி, 5 மணி, 7 மணி என ஏதேனும் ஒரு மணியின் தொடக்கத்தில் வெளியிடப்படுவதுதான் வழக்கம்.

போஸ்டர் ரிலீஸ்க்கான நேரம்:

ஆனால், வாரிசு படத்தின் போஸ்டர்களை ரிலீஸ் செய்வதற்கு சற்று வித்தியாசமாக 6.01, 11.44 , 5.02 என நேரத்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பலருக்கும் இது புரியாத புதிராக இருக்கிறது. இது ஏன் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பான சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, போஸ்டர் ரிலீசுக்கான நேரத் தேர்வுகள் அனைத்தும் ‘10′ என்ற எண்னை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன.

6.01 PM ஐ 24 மணி நேரக் கணக்கில் கொண்டால் 18.01. அதன்படி, 1+8+0+1= 10

11.44 PM ஐ 1+1+4+4= 10

5.02 PM – அதாவது 17.02 ஆனது 1+7+0+2= 10 என அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஃபர்ஸ்ட் லுக் கூட 04:06 மணிக்குத்தான் வெளியாக இருக்கிறது (0+4+0+6 =10).

Advertisement