வாரிசு படத்தில் விஜய் கட்டி இருக்கும் வாட்ச் இத்தனை கோடியா ? அப்படி என்ன இருக்கு அதுல ?

0
1509
- Advertisement -

வாரிசு திரைப்படத்தில் விஜய் கோடி ரூபாய் மதிப்பில் வாட்ச் கட்டி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வாரிசு படம்:

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடித்தானது தெலுங்கானாவில் தொடங்கியது.

படம் குறித்த தகவல்:

தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் கூட சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அவர்கள் ரசிகர்களை பார்த்து கைய அசைத்து விட்டு சென்றார். அப்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

விஜய் கையில் கட்டிய வாட்ச்:

மேலும், இந்த படத்தில் முதல் சிங்கள் இந்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் கோடி ரூபாய் மதிப்பில் விஜய் வாட்ச் கட்டி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, கோட்டுசூட்டில் விஜய் மாஸாக இருக்கும் வாரிசு படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் விஜய் கையில் கட்டி இருக்கும் வாட்சை தான் எல்லோருமே ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள்.

வாட்ச் குறித்த தகவல்:

இந்த வாட்சினுடைய பெயர் patek philippe. இதனுடைய மதிப்பு ஒரு கோடியே 25 லட்சம். இது சுவிட்சர்லாந்தின் ஆடம்பர நிறுவன வாட்ச் ஆகும். இந்த படத்தில் இந்த ஒரிஜினல் வாட்சை தான் விஜய் கட்டியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த வாட்ச் ஸ்டைன்லெஸ் ஸ்டீலால் ஆனது. வாட்ச் உள்ளே தங்கமூலம் பூசப்பட்டதாக இருக்கிறது. கைகளில் இறுக்கம் ஏற்படாத விதமாக இந்த வாட்சை டிசைன் செய்திருக்கிறார்கள். இந்த வாட்ச்சை கட்டிருக்கும் போது ஒரு கம்போர்ட் ஜோன் கொடுக்குமாம். தற்போது இந்த வாட்ச்சை குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement