விஜய்க்கு சொன்ன கதை இதுதான்,வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் – அதான் ஏற்கனவே அப்படி ஒரு படம் இருக்கே.

0
884
Vijay
- Advertisement -

லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், இந்த பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, நாசர், போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.

- Advertisement -

மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் பகுதியில் சில முக்கியமான காட்சிகள் படப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

விஜய் நடிக்கும் அடுத்த படம்:

இந்நிலையில் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதாவது, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அட்லி அல்லது தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் வெற்றி மாறனும் விஜய் இடம் ஒரு கதையை சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் வெற்றிமாறன் அளித்த பேட்டிவீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் வீடியோ:

அதில் அவர், நடிகர் விஜய் பூவே உனக்காக, லவ் டுடே போன்ற படங்களை முடித்த பிறகு 1999, 2000 ஆண்டில் விஜய் சந்தித்து ஒரு கதை சொன்னேன். அது கிட்டத்தட்ட நண்பன் படத்தினுடைய கதை. அவருக்காக எழுதிய கதை இல்லை. ஆனால், அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தார். ஆகவே, தளபதியின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement