மூன்றரை வயதில் இறந்த தங்கை. சிறு வயதில் தனது குடுப்பதுடன் விஜய். அறிய புகைப்படம் இதோ.

0
1442
vijay

தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். இவரது படங்கள் என்றாலே அது ஹிட்டோ பிளாப்போ, ஆனால் சூப்பர் டூப்பர் வசூல் கலெக்ஷன் தான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் கூட 300 கோடி வசூல் சாதனை செய்திருந்தது. விஜய்யின் குடும்பத்தை பற்றி அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே அறிந்த ஒரு விடயம் தான். அதே போல, அவருக்கு ஒரு தங்கை இருந்தார் என்பதும் அவர் சிறுவதிலேயே இருந்துவிட்டார் என்பதும் அறிந்த விடயம் தான்.

Actor Vijay Fans on Twitter: "His sister “Vidhya” died when she ...

இளைய தளபதி விஜய் தன் தங்கை மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரின் இழப்பு தான் விஜய்யை இத்தனை அமைதியாக்கியது என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் விஜய்யின் தங்கையின் சில அறியபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிவந்தன. சமீபத்தில் கூட தனது தங்கையின் இழப்பு விஜய்யை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்று விஜய் தந்தை சந்திரசேகர் கூறியிருந்தார்.

- Advertisement -

அதில், வித்யாவுக்கு மூன்றரை வயசு ஆச்சு. அப்போ விஜய்க்கு 9 வயசு இருக்கும்.  வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோச்சு. ஒருநாள்  விஜய் ப‌க்கத்துல இருக்கிறப்பவே கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல மூச்சு திணறியபடி வித்யா கண்மூடிட்டா. தன்னோட கண் எதிரே தன் தங்கை கண் மூடினத விஜயால தாங்க முடியாம ‘அப்பா…’னு  கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுட்டேதான் இருக்கு என்று கூறியிருந்தார்.

விஜய்க்கு அவரது தங்கையின் இழப்பு இன்றளவும் மறக்க முடியாத ஒரு சம்பவமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் மற்றும் அவரது தங்கை வித்யாவின் அறிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் தனது தங்கையுடன் தனது அம்மா ஷோபா மற்றும் அப்பா எஸ் ஏ சிவுடன் இருகிறார் விஜய்.

-விளம்பரம்-

இதுவரை வெளிவராத இந்த அரிய புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள் இது ஒரு புறம் இருக்க தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு வைரஸ் காரணமாக இந்த திரைப்படத்தின் செய்திகள் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது

Advertisement