தன்னுடைய விவாகரத்து குறித்து முதன் முதலாக மனம் திறந்து பாடகர் விஜய் யேசுதாஸ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான பாடகர் விஜய் யேசுதாஸ். இவர் இந்திய அளவில் பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸின் மகன். இன்றும் இவரின் பாடல்கள் மக்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் இருக்கிறது. இப்போதும் இவருடைய குரலில் ஹரிவராசனம் பாடல் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

அதேபோல் விஜய் யேசுதாசும் தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2000 ஆண்டு வித்யாசாகர் இசையமைப்பில் வந்த பாடலின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியிருக்கிறார். மேலும், இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

Advertisement

விஜய் ஏசுதாஸ் குறித்த தகவல்:

இதற்காக விஜய் யேசுதாஸ் பல்வேறு விருதுகளையும் குவித்திருக்கிறார். பாடகராக மட்டுமல்லாமல் இவர் மலையாளத்தில் 2010 ஆம் ஆண்டு அவன் என்ற படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தில் வில்லனாகவும் நடித்து இருந்தார். அதன் பின்னர் படை வீரன் படத்தில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார்.

விஜய் ஏசுதாஸ் திருமண வாழ்க்கை:

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிகில் பட புகழ் அம்ரிதா ஐயர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பாடகராக மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். இதனிடையே விஜய் யேசுதாஸ் அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு தர்ஷனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு இருவருமே பிரிந்து விட்டனர். இருவருமே விவாகரத்து பெற்று தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

Advertisement

பாடகர் விஜய் யேசுதாஸ் பேட்டி:

இந்நிலையில் முதல் முறையாக பாடகர் விஜய் யேசுதாஸ் தன்னுடைய விவாகரத்துக் குறித்து சொன்னது, எங்களுடைய பிரிவு மூலம் அதிகமாக நான் பாதிக்கப்பட்டதை விட என்னுடைய குடும்பத்தினால் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். என்னுடைய குழந்தைகளுக்கு எப்போதும் சந்தோஷம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

Advertisement

விவாகரத்து குறித்து சொன்னது:

குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்களா? அம்மாவுடன் இருக்கிறார்களா? என்பதை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு எங்கு சந்தோசமோ அங்கு இருக்கிறார்கள். அதேபோல் விவாகரத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்லணும். காரணம் எனக்கு அதைப் பற்றி எல்லாம் யோசிக்க நேரமே இல்லை. நான் என்னுடைய கேரியரில் தான் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement