உலகம் முழுவதும் கொத்து கொத்தாக மக்கள் இறந்து கொண்டே வருகிறார்கள். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 தாண்டியது. இதுவரை இந்தியாவில் 339 பேர் கொரோனாவினால் அநியாயமாக இறந்து உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது இந்த உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பல சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள். இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்கள் தான். இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் 5 கோடி ரூபாய்க்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Advertisement

விஜயகாந்த் அவர்கள் இந்த அறிவிக்கை குறித்து கூறியிருப்பது, வரலாறு காணாத நிகழ்வாக இந்த கொரோனா தாக்கம் நடந்து கொண்டிருக்கின்றது. கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடே பொருளாதாரத்தில் சிக்கி தவித்து வருகின்றது. இந்த நிலைமையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும், தேமுதிக தலைமைக் கழகமும் மக்களுடைய தேவைக்காக அரிசி ஒப்படைத்தார்கள். பல மாவட்டங்களில் மக்களுக்காக மக்கள் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மே 3ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்படும்.

Advertisement

ஊரடங்கு உத்தரவையும், சமூக இடைவெளியும் நீங்கிய பிறகு திமுக சார்பில் மாவட்ட வாரியாக திமுக சார்பில் மாவட்ட வாரியாக நகரம், ஒன்றியம், பேரூர் கழகம் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாக செய்ய வேண்டும். உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை, மருத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் அவர்களுக்கு பண உதவி போன்றவற்றை யாருக்கு என்ன தேவை இருக்கிறது என்பதை அறிந்து மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Advertisement

ஊரடங்கு விலகிய பிறகு மூன்றாம் தேதிக்கு பின்னர் கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் நிவாரண பொருட்களை வழங்க தயாராக இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் அஜித் 1.25 கோடி கொடுத்திருந்தார். அவரை தொடர்ந்து லாரன்ஸ் 3 கோடி கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஆனால், கேப்டன் அவர்கள் 5 கோடி நிதியை அறிவித்து அனைவரையும் முந்தியுள்ளார்.

Advertisement