நடிகர் விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போய் இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனெக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.
இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதோடு ரஜினி, கமல், சரத்குமார்,பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.
விஜயகாந்த் திரைப்பயணம்:
மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். பின் உடல் நல குறைவால் சில ஆண்டுகளாக விஜயகாந்த் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார்.
விஜயகாந்த் குடும்பம்:
இதனிடையே நடிகர் விஜயகாந்த் அவர்கள் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இளையவரான சண்முக பாண்டியன் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து வருகிறார். விஜய பிரபாகரன் தன் தாயார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாமா எல் கே சதீஷ் ஆகியோரை பின்பற்றி தேமுதிக-வில் செயல்பட்டு வருகிறார்.
விஜயகாந்த் உடல்நிலை:
சமீப காலமாக விஜயகாந்துக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இவருடைய கட்சியை இவரது குடும்பம் தான் கவனித்து வருகிறது. மேலும், உடம்பு சரியில்லாமல் போனதிலிருந்து விஜயகாந்த் மக்களை சந்திப்பதும், பேசுவதையும் குறைத்துக் கொண்டார். இந்நிலையில் விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
வருத்தத்தில் ரசிகர்கள்:
அதாவது, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தன்னுடைய பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார். அப்போது விஜயகாந்துடன் எடுத்த புகைப்படத்தை தான் அவர் இன்ஸ்டால் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே கேப்டனா இது! இப்படி உடல் எடை குறைந்து போய்விட்டாரே? எப்படி இருந்த மனுஷன் என்றெல்லாம் வருத்தத்தில் பதிவுகளை போட்டு வருகிறார்கள்