சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட விஜயகாந்த்.! என்ன படம் தெரியுமா.!

0
2084
Vijayakanth
- Advertisement -

தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார். ரஜினி மற்றும் கமல் என்ற மாபெரும் நட்சத்திரங்கள் ஆதிக்கம் செய்த காலத்தில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜயகாந்த்.

-விளம்பரம்-
Related image

ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த் அதன் பின்னர் ரஜினி கமலுக்கு இணையாக ஒரு ஹீரோவாக வலம் வந்தார். இவர் நடித்த கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள், வானத்தைப்போல, வல்லரசு போன்ற பல படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதிலும் நடிகர் விஜயகாந்த் நடித்த ‘வானத்தைப்போல’ திரைப்படம் நல்ல ஒரு குடும்ப திரைப்படமாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதே பாணியில் நடிகர் விஜயகாந்த் வேறு ஒரு படத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், சில பல காரணத்தால் அந்த படம் கை நழுவி போனது. அது வேறு எந்த படமும் கிடையாது லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ திரைப்படம் தான்.

Related image

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி ,சினேகா போன்ற பலர் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் முதலில் விஜயகாந்த் தான் நடிக்க இருந்தாராம். ஆனால், சில பல காரணங்களால் இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்க முடியாமல் போய்விட்டது.விஜயகாந்த் இந்த படத்தில் நடித்திருந்தால் இந்த படம் மேலும் வெற்றியடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

-விளம்பரம்-
Advertisement