விஜயகாந்துடன் சேர்ந்து நடித்த 6 பிரபல ஹீரோக்கள். அதுல ரெண்டு பேரு இப்ப செம டாப் நடிகர்

0
1142
vijayakanth
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் டாப் ஹீரோக்கள் ஆக இருக்கும் நடிகர்கள் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பது அபூர்வமான ஒன்று. அதிலும் பிரபலமான நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் ஹிட் ஆகுவது வேற லெவல். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டனாகவும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு தான். இவர் தன்னுடன் நடித்த பல நடிகர்களை திரை துறையில் தூக்கி விட்டிருக்கிறார். மேலும், இவர் உடன் சேர்ந்து நடித்த பல ஹீரோக்கள் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக திறந்து வருகிறார்கள். அந்த வகையில் இவர் உடன் சேர்ந்து நடித்த ஹீரோகளின் பட்டியலை தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-
Veerapandiyan Tamil Full Movie HD | Sivaji Ganesan | Vijayakanth | Raadhika  | Super South Movies | - YouTube

சிவாஜி கணேசன்:

- Advertisement -

1987 ஆம் ஆண்டு கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த வீரபாண்டியன் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த்துடன் சேர்ந்து சிவாஜிகணேசன் நடித்து இருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக ராதிகா நடித்திருந்தார். படத்தில் சிவாஜி கணேசன் ராதிகாவுக்கு அண்ணனாக நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

ராம்கி:

-விளம்பரம்-

1988 ஆம் ஆண்டு இயக்குனர் தேவராஜன் இயக்கத்தில் வெளிவந்த செந்தூரப்பூவே என்ற படத்தில் விஜயகாந்த் நடித்து இருப்பார். இந்த படத்தில் விஜயகாந்துடன் ராம்கி, ஸ்ரீப்ரியா என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்த ராம்கி தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக உள்ளார்.

senthoora poove

முரளி:

என் ஆசை மச்சான் என்ற படத்தில் முரளியுடன் விஜயகாந்த் நடித்து இருப்பார். இந்த படத்தில் இவர்களுடன் ரேவதி, நந்திதா நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குநர் சுந்தர் ராஜன் இயக்கி இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. திரை உலகில் இந்த படம் முரளிக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம். முரளி இவ்வுலகில் இல்லை என்றாலும் அவருடைய படங்கள் என்றென்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

சரத்குமார்:

1993ஆம் ஆண்டு இளவரசன் இயக்கத்தில் வெளிவந்த படம் தாய்மொழி. இந்த படத்தில் சரத்குமார், மோகினி நடித்திருப்பார்கள். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து இருந்தார். இந்த படம் சரத்குமாருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு இவர் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார்.

தளபதி விஜய்:

1993 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் செந்தூரபாண்டி. இந்த படத்தில் விஜய், யுவராணி கௌதமி, விஜயகாந்த் நடித்து இருப்பார்கள். விஜயகாந்த் இந்த படத்தில் செந்தூரப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆரம்ப காலத்தில் விஜய் திரையுலக பயணத்தில் இந்த படம் ஒரு முக்கிய படமாக அமைந்தது.

சூர்யா:

விஜயகாந்துடன் சூர்யா எங்கள் அண்ணா என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் மீனா, மானசா கதாநாயகியாக நடித்து இருந்தார்கள். இந்த படத்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சூர்யாவுக்காக நடிகர் விஜய் நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து என்ற ஒரு பாடலை பாடியிருந்தார்.

இப்படி விஜய்காந்த்உடன் நடித்த சக நடிகர்கள் தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபலமாகி உள்ளார்கள். அதிலும் விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக உள்ளார்கள். தான் வளர்வதை போலவே சக நடிகர்களையும் விஜயகாந்த் தூக்கி விட்டு இருக்கும் செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

Advertisement