சிறு வயதில் கேப்டன் ஓடி ஆடிய விளையாடிய சாலை, பூர்வீக வீடு, குலா சாமி கோவில் – இதுவரை நீங்கள் பார்க்காத அறிய வீடியோ இதோ.

0
3075
vijayakanth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் காலத்தில் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது.

- Advertisement -

விஜயகாந்த் திரைப்பயணம்:

அதோடு இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அடிக்கடி உடல் பிரச்சனை காரணமாக விஜயகாந்த், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார். தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர். மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட கேப்டன் அவர்கள் தனது கட்சிக்காக எந்த ஒரு பிரச்சாரமும் செய்யவில்லை, அவ்வளவு ஏன் தன் கட்சியை ஆதரித்து கருத்து கூட வெளியிடவில்லை. இதனால் கேப்டன் எப்படி தான் இருக்கிறார்? என்ற கவலை ரசிகர்கள் மத்தியிலும் கட்சி தொண்டர்கள் மத்தியிலும் இருந்து கொண்டு வருகிறது.

விஜயகாந்த் நடிக்கும் படம்:

அதே போல கேப்டன் நலமுடன் இருக்கிறார் விரைவில் அவர் பழையபடி வருவார் என்று தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கேப்டன் அவர்கள் 11 ஆண்டு கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது . தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய்மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜயகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை Infinity film ventures தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தான் விஜயகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதனை சமீபத்தில் இயக்குனர் மில்டன் உறுதிப்படுத்தி இருந்தார்.

-விளம்பரம்-

விஜயகாந்த் பூர்வீக வீடு:

இந்நிலையில் விஜயகாந்தின் பூர்வீக வீட்டின் பரிதாப நிலை குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பகுதியில் ராமானுஜபுரம் என்ற ஊரில் பிறந்தவர் விஜயகாந்த். இவரின் தந்தை அரிசி ஆலையில் வேலை பார்த்தவர். பின் சிறிது காலத்தில் அவர் அரிசி ஆலையை சொந்தமாக வாங்கி விட்டார். அதனால் விஜயகாந்த் குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். விஜயகாந்த்தின் குலதெய்வம் சாமி மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கத்தில் காங்கேயன் ஊரில் வீரசின்னம்மாள் திருக்கோயில். பெரும்பாலும் விஜய்காந்த் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் தன்னுடைய குல தெய்வம் சாமியின் பெயர் அவர் வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் அரசியலிலும் பல சாதனை செய்து இருக்கிறார்.

வைரலாகும் வீடியோ:

இவர் கால் வைத்த எல்லா துறையிலுமே சாதித் இருந்தார். மக்கள் மத்தியில் நல்ல மனிதர் என்ற பெயர் எடுத்த சிறப்புமிக்க விஜயகாந்தின் பூர்வீக வீடு இடிந்து பாழடைந்து இருக்கிறது. புகழ்வாய்ந்த மாமனிதனின் வீடு இப்படி இருப்பதை நினைத்து கொடுமையாக தான் இருக்கிறது. இவருடைய பூர்வீக வீட்டை கவனிக்காமல் மறந்துட்டாரா? என்று தெரியவில்லை. இன்று இவருடைய பூர்வீக இடத்தில் ஏதாவது ஒரு கட்டிடம் கட்டினால் அவருடைய நினைவாக இருக்கும். விஜயகாந்த் சார் இதை மனதில் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். அவர் இல்லை என்றாலும் அவருடைய மகன்கள் இதை எடுத்து செய்தால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டு மக்கள் சார்பாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement