நேற்று (செப்டம்பர் 10) விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.

Advertisement

கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இழப்பால் விஜய் டிவி பிரபலங்களை தவிர சினிமா நடிகர்கள் கூட சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், பல்வேறு பிரபலங்கள் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செய்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் மகன், பிரபாகரன் நேரில் சென்று பாலாஜி குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார்.

வடிவேலு பாலாஜியின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன், 2017 ஆம் ஆண்டு என்னுடைய பேட்மிண்டன் அணிக்காக ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்திய போது கடைசி நிமிடத்தில் அந்த நிகழ்ச்சி கேன்சல் ஆனதால் வடிவேல் பாலாஜியை தொடர்பு கண்டு நீங்கள் இந்த நிகழ்ச்சியை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அவர் இரவோடு இரவாக கலக்கபோவது யாரு குழுவுடன் வந்து கோயம்பத்தூரில் நிகழ்ச்சியை செய்து கொடுத்தார். அதை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் பிரபாகரன்.

Advertisement
Advertisement