தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார்.அது மட்டுமில்லாமல் சமீபகாலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார்.

தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர். விஜயகாந்துக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். கடந்த ஜுன் 14ம் தேதி விஜயகாந்த் அவர் வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

Advertisement

இதையும் பாருங்க : சிவாஜி கணேசனின் பாரம்பரிய பண்ணை வீட்டை பார்த்துளீர்களா ? அதில் என்ன சிறப்பு.

நீக்கப்பட்ட 3 விரல்கள் :

சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றியுள்ளார்களாம். தற்போது சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜயகாந்த் விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று ரசிகர்களும் பிரபலங்களுக்கும் அவருக்காக வேண்டினர்.

Advertisement

ஸ்டன்டில் அசத்திய கேப்டன் :

கேப்டன் என்று சொன்னதும் அவரும் சண்டை காட்சிகள் தான் நினைவிற்கு வரும். அதிலும் கேப்டன் காலில் சுழட்டி சுழட்டி அடிக்கும் சண்டைகளுக்கு மிகவும் பெயர் போனவர். அப்படிபட்ட கால்களில் இருந்து விரல்கள் நீக்கப்பட்டது தான் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பொதுவாக சினிமா ஹீரோக்கள் பலர் சட்டை காட்சிகளில் டூப் போட்டு தான் நடிப்பார்கள். அதிலும் முன்னனி ஹீரோ என்றால் சொல்லவே வேண்டியது இல்லை.

Advertisement

சேதுபதி IPS :

தனக்கு எந்த காயமும் ஏற்பட கூடாது என்று சிறு ஸ்டண்ட் காட்சிகளில் கூட டூப் போட்டு தான் நடிப்பார்கள். ஆனால், கேப்டன் இதில் வித்யாசமானவர். முன்னனி நடிகராக இருந்த போதே பல ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார். அதற்கு உதாரணம் தான் சேதுபதி Ips படத்தின் கிளைமாக்ஸ்ஸில் வந்த இந்த ஒரு காட்சி. கேப்டன் நடிப்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியானது தான் இந்த படம்.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சி :

மீனா, நம்பியார், ஸ்ரீதிவ்யா, விஜயகுமார், கௌண்டமணி, செந்தில் என்று பலர் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜயகாந்த் மணிக்கூண்டில் ஏறி அதில் இருக்கும் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சி திரையரங்கில் பார்த்த ரசிகர்களை விசிலடித்து பார்க்க வைத்தது.

டூப் போடாமல் நடித்துள்ள கேப்டன் :

இப்படி ஒரு நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜயகாந்த் ரோப் மற்றும் டூப் எதுவும் இல்லாமல் நடித்ததாக ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பதிவில் தனது தாத்தா சரவணன், ஸ்டண்ட் டபுள் இல்லாமல் சண்டைக் காட்சிகளில் நடிப்பதில் விஜயகாந்த்தின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் பற்றி பெருமைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

Advertisement